Avoiding Harmful Associations
On how close associations shape conduct and reputation, read without turning birth, class, caste, or identity into moral rank.
10 of 10 narratives drafted · all Tamil, Pope & Parimelazhagar sourced
சிற்றின மஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்
“The great of soul will mean association fear; / The mean of soul regard mean men as kinsmen dear.”
நிலத்தியல்பா னீர்திரிந் தற்றாகு மாந்தர்க்
கினத்தியல்ப தாகு மறிவு
“The waters' virtues change with soil through which they flow; / As man's companionship so will his wisdom show.”
மனத்தானா மாந்தர்க் குணர்ச்சி யினத்தானா
மின்னா னெனப்படுஞ்சொல்
“Perceptions manifold in men are of the mind alone; / The value of the man by his companionship is known.”
மனத்துளது போலக் காட்டி யொருவற்
கினத்துள தாகு மறிவு
“Man's wisdom seems the offspring of his mind; / 'Tis outcome of companionship we find.”
மனந்தூய்மை செய்வினை தூய்மை யிரண்டு
மினந்தூய்மை தூவா வரும்
“Both purity of mind, and purity of action clear, / Leaning no staff of pure companionship, to man draw near.”
மனந்தூயார்க் கெச்சநன் றாகு மினந்தூயார்க்கு
கில்லைநன் றாகா வினை
“From true pure-minded men a virtuous race proceeds; / To men of pure companionship belong no evil deeds.”
மனநல மன்னுயிர்க் காக்க மினநல
மெல்லாப் புகழுந் தரும்
“Goodness of mind to lives of men increaseth gain; / And good companionship doth all of praise obtain.”
மனநல நன்குடைய ராயினுஞ் சான்றோர்க்
கினநல மேமாப் புடைத்து
“To perfect men, though minds right good belong, / Yet good companionship is confirmation strong.”
மனநலத்தி னாகு மறுமைமற் றஃது
மினநலத்தி னேமாப் புடைத்து
“Although to mental goodness joys of other life belong, / Yet good companionship is confirmation strong.”
நல்லினத்தி னூங்குத் துணையில்லை தீயினத்தி
னல்லற் படுப்பதூஉ மில்
“Than good companionship no surer help we know; / Than bad companionship nought causes direr woe.”